Thursday, March 25, 2010

நான் கண்டு வியந்த மனிதன்

தன்னலம் கருதாது தன் குடும்பத்தார் நலம் மட்டும் கருதும் ஒரு உண்மை நண்பனின் கதை.
அதிகவசதில்லாத நடுத்தரமான கூட்டுக்குடும்பம், கிட்டத்தட்ட நான்கு சகோதரர்களின் குடும்பங்கள் ஒரே வீட்டில் ஒற்றுமையாக வசிக்கின்றனர். இந்தகாலத்தில் இது ஒரு நல்ல விஷயமாக இருந்தாலும் அதிலும் ஒரு சில (பல) கஷ்டங்கள் இருக்கத்தான் செய்கின்றன.
என் நண்பனோ குடும்பத்தின் முதல் ஆண் வாரிசு. முதல் வாரிசு என்பதால் மட்டுமல்ல பொறுப்பு மிகுந்த பல கடமைகள் தானே சுமக்க வேண்டும் யாருக்கும் கஷ்டம் கொடுக்ககூடாது என்று நினைக்ககூடிய அன்புள்ளம்கொண்ட இளைஞன்.அவன் தன் கஷ்டத்தை பாராது அல்லும் பகலும் உழைப்பவன் காரணம் அவன் வீட்டில் யாரும் சரியாக வேலைக்கு செல்வதில்லை அப்படியே சென்றாலும் ஓரிரு நாட்கள் வேலை செய்துவிட்டு அதில் வரும் காசை ஊதாரித்தனமாக செலவிட்டுவிட்டு வேலையையும் தொலைத்துவிட்டு வரும் சோம்பேறிகள்.ஏதோ தனக்கும் இந்த குடும்பத்திற்கும் சம்பந்தம் இல்லாதது போல் நடந்துக்கொள்ளும் அவர்களின் மேல்
கோபப்படுவதில் அர்த்தமில்லை என்று புரிந்துக்கொண்டு அவர்கள் பெற்ற குழந்தைகளை நன்றாக வாழவைக்க வேண்டுமென்ற பொறுப்பும் கடமையும் தனது திருமணத்தை பற்றி யோசிக்காது அவர்களுக்காகவே தன் காலத்தை அவர்களுடன் மிகவும் சந்தோசமாக செலவிடும் அவன் படும் கஷ்டங்கள் கொஞ்சமல்ல.சொந்தமாக வீடு இருந்தும் மழை காலங்களில் ஒதுங்ககூட வழியில்லாததுபோல் வீட்டிற்குள் நுழையும் மழை துளிகள், படிக்கும் வயதில் வறுமையை காரணம் காட்டி வீட்டில் முடங்கி கிடக்கும் தம்பி தங்கைகள் இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் தன்னைபற்றி யோசிக்காது தன் குடும்பத்தைப்பற்றி யோசிக்கும் அவனிடம் ஒருநாள், ஏன் திருமணம் வேண்டாம் என்கிறாய் என்று காரணம் கேட்டோம் அதற்கு அவன் கூறிய காரணம், என்னுடைய கஷ்டத்தை என்னை நம்பி வரும் அந்த பெண் சுமப்பதை என்னால் அனுமதிக்க முடியாது.மேலும் என்னால் அவளுடைய தேவைகளை சரிவர நிறைவு செய்ய முடியும் என்ற நம்பிக்கை என்னிடம் இல்லை என்று பலவகையான காரணம் காட்டி திருமணத்தை தள்ளிபோடுகிறான். இத்தனைக்கும் காரணம் அவன் மனதிலும் எண்ணத்திலும் நிறைந்திருக்கும் அவன் குடும்பமும் அவன் நிறைவேற்றவேண்டிய கடமைகளும் . இதையெல்லாம் அருகிலிருந்து பார்க்கும் சிலருக்கு அவன்மேல் பரிதாபமும் பலருக்கு வியப்பு ஏற்படுவதும் இயல்புதான். இருந்தாலும் என்னை பொறுத்தவரை இவனை போல நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பலர் இன்னும் சிலுவைசுமக்காத ஏசுவாகதான் வாழ்கின்றனர்!

Thursday, March 18, 2010

இவங்களெல்லாம் என்ன பண்ணலாம்?




நாங்கள் போனவாரம் ஒரு குளிர்சாதனப்பெட்டி (ப்ரிடிஜ்) வாங்கினோம். வாங்கும்போது கடை உரிமையாளர் குளிர்சாதனப்பெட்டிக்குள் ஸ்டெபிலைசர் இருப்பதாகவும் நீங்கள் நம்பவில்லை என்றால் இதில் உள்ள லேபிளை பாருங்கள் என்றும் கூறினார்.அவர் சொன்னபடி லேபிளும் இருந்தது. நம்பிக்கையாக நாங்களும் வாங்கினோம். குளிர்சாதனப்பெட்டி வாங்கிய மூன்று நாட்களுக்கு பிறகு,


ஒரு நபர் தொலைபேசியின் மூலமாக நாங்கள் குளிர்சாதனப்பெட்டி பழுதுபார்க்கும் அலுவலகத்திலிருந்து பேசுகிறோம். உங்களுக்கு குளிர்சாதனப்பெட்டி உபயோகிக்கும் முறையைப்பற்றி கூறவேண்டும் என்று கூறினர். நாங்களும் சரி வாருங்கள் என்று அழைத்தோம். சொன்ன நாளில் ஒரு இளைஞன் எங்கள் வீட்டுக்கு வந்தான். வந்தவன் குளிர்சாதனப்பெட்டி உபயோகிக்கும் முறையைப்பற்றி கூறியதோடு அல்லாமல் உங்கள் குளிர்சாதனப்பெட்டிக்கு ஸ்டெபிலைசர் கட்டாயமாக வைக்கவேண்டும் இல்லையென்றால் குறுகிய காலத்திற்குள்ளேயே பழுதாகிவிடும் என்றும் ஸ்டெபிலைசர் எங்களுடையதுமட்டும்தான் வைக்கவேண்டும் என்றும், எங்களிடம் மட்டும்தான் தரமாக கிடைக்கும் அதுவுமல்லாமல் என்னிடம் ஒன்றுமட்டும் தான் உள்ளது நீங்கள் தாமதித்தால் திரும்ப பெறுவதற்க்கு ரொம்ப நாட்களாகும் எனவே உடனடியாக வாங்குங்கள் என்றும் கூறினான்.நாங்கள் அவனிடம் கடைக்காரன் ஸ்டெபிலைசர் தேவையில்லை என்று கூறினான் மற்றும் குளிர்சாதனப்பெட்டியில் உள்ள லேபிளிலும் தேவையில்லை என்று எழுதப்பட்டுள்ளது இப்போது நீங்கள் கட்டாயமாக வாங்கவேண்டும் என்று கூறுகிறீர்கள் இதை நீங்கள் நாங்கள் வாங்கும்போதே ஏன் சொல்லவில்லை என்று கேட்டோம்.


அதற்க்கு அவன் அந்த லேபிளின் கீழ் உள்ள வாசகத்தை பாருங்கள் அதில் 160º-லிருந்து 230º- வரை மட்டும் தான் மின்சாரதைத்தாங்கும் வசதி உள்ளது. வெயில் காலத்தில் மின்னிணைப்பு அடக்கடி துண்டிக்கபடும் நேரத்தில் மின்சாரம் சரிவர இல்லாமல் குறைந்தும் அதிகமாகவும் வரும் இதனால் உங்களது குளிர்சாதனப்பெட்டி விரைவில் பழுதாகிவிடும் என்றும் விற்பனையாளர்கள் வியாபாரத்திற்காக இதை யாரிடமும் கூறுவதில்லை என்றும் கூறினான்.


அவனுடைய வார்த்தைகளை நம்பிய நாங்கள் ஸ்டெபிலைசர் விலை என்ன என்று கேட்டோம். அதற்க்கு அவன் 1550 ருபாய் மட்டுமே என்று கூறினான். நாங்கள் உடனே நீங்கள் கூறிய விவரத்திற்கு ரொம்ப நன்றி எங்களுக்கு தேவைப்பட்டால் நாங்கள் உங்களை அழைக்கிறோம் என்று கூறி அனுப்பினோம்.அதன் பிறகு நாங்கள் கடைக்காரனிடம் சென்று ஏன் எங்களிடம் முழு விவரத்தை சொல்லவில்லை என்று கேட்டோம். அதற்கு அவர்கள் எங்களின் சிபாரிசுப்படி ஸ்டெபிலைசர் தேவையில்லை உங்களுக்கு வேண்டுமானால் எங்களிடம் உள்ளது என்று கூறினர்.


சரி எப்படியாவது வாங்க வேண்டும் என்று முடிவுசெய்து அவனிடம் விலைக்கேட்டால் அவன் 1100 ரூபாய் என்று கூறினான் கடைசியாக வேறுவழியில்லாமல் இவ்வளவு காசுப்போட்டு வாங்கிய குளிர்சாதனப்பெட்டியை காப்பாற்றுவதற்காக ஸ்டெபிலைசர்
வாங்கினோம்.


இதில் என்னவென்றால் இவர்களிடமே இவ்வளவு வித்தியாசத்தில் விலையிருக்கிறது என்றால் உண்மையானவிலை என்னவாக இருக்கும்? மற்றும் டெமோ என்று சொல்லிக்கொண்டு எப்படி மக்களை ஏமாற்றுகின்றனர் பாருங்கள்?
எனவே குளிர்சாதனப்பெட்டி வாங்கும் எல்லோரும் தீர விசாரிச்சு அப்புறமா வாங்குங்க தேவையில்லாம காச விட்டுடாதீங்க
.

Tuesday, March 16, 2010

இப்படியும் ஓர் ஆண் !

ஒரு சில உண்மை விஷயங்கள்!
இந்த காலத்துல திருமணமான பெண்கள் எல்லோரும் சந்தோஷமா இருக்காங்களா அப்பிடினா,
இல்லை என்பது ஒரு சிலர் கருத்து, வாழலாம் என்பது ஒரு சிலர் கருத்து, கஷ்டமோ நஷ்டமோ எல்லாத்தையும் பெண்கள் சகித்துகொண்டு வாழ பழகிக்கணும் என்பது ஒரு சிலர் கருத்து.
ஒரு பெண் திருமணமாகி இரண்டே மாதத்தில் கணவரை விட்டு பிரிந்த கதை இது!
பெரியவர்கள் வாழ்த்த ஊர் அறிய நடந்த திருமணம் அது, தன் பெற்றோர் பெருமை படும் படி வாழ விரும்பிய அந்த பெண்ணுக்கு கிடைத்த முதல் பரிசு, மாமனார் மாமியார் வாயிலாக வந்த செய்தி பெற்றோரை மறந்துவிடு என்பது, அதிர்ச்சியாக இருந்தாலும் பெற்றோரின் அறிஉறைப்படி கஷ்டத்தை அனுபவிக்க தயாராகினால்.
சொந்த வீட்டில் வேலைகாரியாய் நடத்தப்பட்டால், எதற்காக என்று புரியாமல் ஒரு நாள் அவள் ஆவேசப்பட கிடைத்த அதிர்ச்சியான செய்தி சொத்து!
உன் பெயரில் இருக்கின்ற சொத்தை எனது பெயருக்கு நீ மாற்றி கொடுக்கும் வரை இது நீடிக்கும் என்றான் அந்த அயோக்கிய கணவன். தான் ஆபத்தில் இருப்பதை உணர்ந்த அவள் வீட்டை விட்டு தப்பிக்க முயன்றால் தப்பு செய்ய தெரியாத அவள் மாட்டிகொண்டால் அதுக்கப்புறம் நடந்த கொடுமை யாராலும் கற்பனை செய்து பார்க்க இயலாதது.
இருளடைந்த தனியறை,ஒருவேளை மட்டும் சாப்பாடு,அடிப்படை தேவைகளுக்கும் அவதிப்பெரும் நிலை,இதற்கிடையில் அடி-உதை. வாழ்வின் அணைத்து கஷ்டத்தையும் முப்பதே நாட்களில் அனுபவித்ததை போல உணர்ந்தாள்.
ஒரு நாள் அவளது கணவன் அவளிடம் சென்று "நான் தவறு செய்துவிட்டேன் என்னை மன்னித்துவிடு உன் பெற்றோர் வந்துள்ளனர் அவர்களிடம் நான் கொடுமை செய்ததாக சொல்லவேண்டாம் மற்றும் நான் அழைக்கும் வரை நீ வெளியே வரவேண்டாம்" என்றும் நம்பும்படியாக அன்பு வார்த்தைகளை பேசினான்.பத்தாம் வகுப்புவறை படித்த சுயமாக சிந்திக்கதெரிந்த அவள் அவனிடம் நம்பினார்போல நடித்தாள். அவளது வீட்டிற்கு வந்த அவளது பெற்றோர் தன் மகள் எங்கே என்றும் அவளை காண விரும்புவதாகவும் கூறினர்.அவர்கள் அதை அனுமதிக்காமல் அவர்களை ஏதேதோ காரணத்தை சொல்லி தடுத்தனர், அவர்களுக்கு சந்தேகம் எழுந்தது,அவர்களது கண்கள் அவளை தேடின ஆனால் அவளை காணமுடியவில்லை.அவர்கள் வீட்டைவிட்டு வெளியேறினர். இருப்பினும் தன் மகளுக்கு ஏதோ ஆபத்து என்று அறிந்த அவளது அம்மா அவளது வீட்டைவிட்டு வெளியேற தயாராகவில்லை.
தன் மகளை வீடெங்கும் தேடினாள் கிடைக்கவில்லை! அவரதுவீட்டு பின்புறம் ஒருசின்ன பூட்டுபோட்ட ஒரு அறை. தெரிந்துகொண்டால் தன் கணவரை அழைத்தாள், பூட்டு உடைக்கப்பட்டது அதில் அவர்களது ஒரே மகளான அவள் இருப்பதை கண்டனர். உருத்தெரியாமல் போன அவளை கண்டு அதிர்ச்சியுற்றனர்.நிலைமையை அறிந்த அவர்கள் தனது மகளை தன்னோடு அனுப்பும்படி கெஞ்சினர்.
இரக்கமில்லா அவன் அவர்களையும் தாக்கினான்.தனக்கு சொத்தை எழுதிகொடு என்று மிரட்டினான். அவளது பெற்றோர் அதை ஒப்புக்கொள்ளவில்லை. அவள் பெயரில் இருக்கும்போதே நீ அவளை இவ்வளவு துன்புறுத்துகிறாய். உன் கையில் சொத்து இருந்தால் நீ அவளைகொன்றுவிடுவாய். எனவே அவளை எங்களிடமனுப்பிவிடு என்று அவனிடம் மன்றாடினர். அவனோ அவர்களைகட்டிவைத்து துன்புறுத்தினான்.
அவர்களின் அழுகுரல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் உதவியால் அங்கிருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று வெளியேறினர்.
தன் மகளின் வாழ்க்கையை நினைத்து வருந்திய அவளது அப்பாவிற்கு பக்கவாதம் வந்துவிட்டது. ஒருபுறம் தன் மகள் வாழ்க்கை கேள்விக்குறியாக இருக்க,ஒருபுறம் தன் கணவன் பக்கவாதத்தில் அவதியுற தன் கணவனையும் மகளையும் காப்பாற்றும் பொறுப்பு அவளது அம்மாவிடம் வந்தது.கஷ்டத்தை கேட்க வந்த உறவினர்கள் கஷ்டத்தில் பங்குகொள்ள தயங்கினர். உறவினர்களின் தயவில்லாத அந்த தாய் தன் சொத்திலிருந்து தாலிவரை எல்லாவற்றையும் வித்து தன் குடும்பத்தை காப்பாற்றினாள்.அதன் விளைவாக தன் மகளை பி.எட் வரை படிக்க வைத்தால், தன் கணவணின் உடல் நலத்தை காப்பாற்றி நல்ல வேலைக்கு செல்லவைத்தால். சரிந்த தன் குடும்பத்தை மீண்டும் தலைதூக்கி நிறுத்தினாள். அந்த குடும்பம் அமைதிநிலையை அடைய சுமார் ஆறு ஆண்டுகள் ஆகின.
அதன்பிறகு தனது மகளுக்கு மற்றோரு துணையைத்தேட ஆரம்பித்தனர்.இருந்தாலும் அவளுடைய வாழ்வில் நடந்த சில கசப்பான சம்பவத்தினால் யாரும் முன்வந்து மணக்க தயாராயில்லை. அவளது வாழ்க்கை அவ்வளவுதான் என்று இருந்த சமயத்தில் ஒரு நல்லஉள்ளம் படைத்த ஒரு மனிதன் தான் மணந்து கொள்வதாக முன்வந்தார். அவரிடம் அவளது பெற்றோர்கள் எல்லா விசயத்தையும் கூறினர்.அவர் எல்லாவற்றையும் கேட்டு சம்மதம் என்றுசொன்னார்.இருப்பினும் அவர்களுக்கு அவர்மேல் நம்பிக்கை வரவில்லை. அவரது வீட்டிற்கு சென்று அவர்களைபற்றி விசாரித்தனர்,மற்றும் அக்கம் பக்கத்திலும் சென்று விசாரித்தனர்.விசாரித்ததில் அவர்களுக்கு தெரிந்தது அவரது வீட்டிலும் அவரது தங்கை இதுபோன்ற கொடுமைகளை அனுபவித்தாலும் அவளை ஒரு நல்ல உள்ளம் கொண்ட ஒருமனிதன் மணந்தார் எனவே தானும் அவரை போல இப்படிப்பட்ட கொடுமைகளால் வாழ்வை தொலைத்த பெண்ணை மணந்து அவளுடன் தனது வாழ்க்கையை தொடங்குவதை இலச்சியமாக கொண்டுள்ளதாகவும் அவரது வீட்டை சேர்ந்தவர்களும் அக்கம் பக்கத்தினரும் கூறினர். இதைவிட வேறென்ன தகுதிவேண்டும் என்றுநினைத்த அவளது பெற்றோர் அவளது வாழ்வை ஒரு நல்லவர் கையில் கொடுத்தனர். திருமணம் நன்றாக நடக்க மீண்டும் தன் வாழ்வை தொடங்கினாள் அந்த பெண்.
இப்பொழுது அந்த தம்பதியினர் சந்தோஷமாக வாழ்ந்தாலும் காலம் கடந்து திருமணம் நடந்ததால் ஒரு வாரிசு இல்லாமல் அவதியுறுகின்றனர்.
அவர்களுக்காக நாம் ஆண்டவனை வேண்டுவோமாக!
இப்பொழுது அந்த பெண் அரசாங்க பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகின்றார். அவளது கணவன் தனியார் போக்குவரத்து துறையில் உயர்ந்த பணியில் உள்ளார். மன்னிக்கவும் பெயரிட விரும்பவில்லை.
நன்றி.

Wednesday, March 10, 2010

என் முதல் பதிவு ..



நான் இன்றுதான் பதிவுகள் எழுதுவதை பற்றி தெரிந்து கொண்டேன் .
இனிமே பாருங்க ..வெளுத்து வாங்கி விடுகிறேன்.

பீ கேர் புல் !

தங்கள் வருகைக்கு நன்றி.

இனிமே எழுதுவேன் ...வானம் வீழும் வரை எழுதுவேன்.. பூமி இடியும் வரை எழுதுவேன். கை உடையும் வரை எழுதுவேன்... குறைந்த பட்சம் ரெண்டு பேரை சாவடிக்கும் வரை எழுதுவேன்.

அனைவரும் தங்கள் ஆதரவை அள்ளி தருமாறு கேட்டு கொள்கிறேன்

சாவுங்கடா !!