Tuesday, March 16, 2010

இப்படியும் ஓர் ஆண் !

ஒரு சில உண்மை விஷயங்கள்!
இந்த காலத்துல திருமணமான பெண்கள் எல்லோரும் சந்தோஷமா இருக்காங்களா அப்பிடினா,
இல்லை என்பது ஒரு சிலர் கருத்து, வாழலாம் என்பது ஒரு சிலர் கருத்து, கஷ்டமோ நஷ்டமோ எல்லாத்தையும் பெண்கள் சகித்துகொண்டு வாழ பழகிக்கணும் என்பது ஒரு சிலர் கருத்து.
ஒரு பெண் திருமணமாகி இரண்டே மாதத்தில் கணவரை விட்டு பிரிந்த கதை இது!
பெரியவர்கள் வாழ்த்த ஊர் அறிய நடந்த திருமணம் அது, தன் பெற்றோர் பெருமை படும் படி வாழ விரும்பிய அந்த பெண்ணுக்கு கிடைத்த முதல் பரிசு, மாமனார் மாமியார் வாயிலாக வந்த செய்தி பெற்றோரை மறந்துவிடு என்பது, அதிர்ச்சியாக இருந்தாலும் பெற்றோரின் அறிஉறைப்படி கஷ்டத்தை அனுபவிக்க தயாராகினால்.
சொந்த வீட்டில் வேலைகாரியாய் நடத்தப்பட்டால், எதற்காக என்று புரியாமல் ஒரு நாள் அவள் ஆவேசப்பட கிடைத்த அதிர்ச்சியான செய்தி சொத்து!
உன் பெயரில் இருக்கின்ற சொத்தை எனது பெயருக்கு நீ மாற்றி கொடுக்கும் வரை இது நீடிக்கும் என்றான் அந்த அயோக்கிய கணவன். தான் ஆபத்தில் இருப்பதை உணர்ந்த அவள் வீட்டை விட்டு தப்பிக்க முயன்றால் தப்பு செய்ய தெரியாத அவள் மாட்டிகொண்டால் அதுக்கப்புறம் நடந்த கொடுமை யாராலும் கற்பனை செய்து பார்க்க இயலாதது.
இருளடைந்த தனியறை,ஒருவேளை மட்டும் சாப்பாடு,அடிப்படை தேவைகளுக்கும் அவதிப்பெரும் நிலை,இதற்கிடையில் அடி-உதை. வாழ்வின் அணைத்து கஷ்டத்தையும் முப்பதே நாட்களில் அனுபவித்ததை போல உணர்ந்தாள்.
ஒரு நாள் அவளது கணவன் அவளிடம் சென்று "நான் தவறு செய்துவிட்டேன் என்னை மன்னித்துவிடு உன் பெற்றோர் வந்துள்ளனர் அவர்களிடம் நான் கொடுமை செய்ததாக சொல்லவேண்டாம் மற்றும் நான் அழைக்கும் வரை நீ வெளியே வரவேண்டாம்" என்றும் நம்பும்படியாக அன்பு வார்த்தைகளை பேசினான்.பத்தாம் வகுப்புவறை படித்த சுயமாக சிந்திக்கதெரிந்த அவள் அவனிடம் நம்பினார்போல நடித்தாள். அவளது வீட்டிற்கு வந்த அவளது பெற்றோர் தன் மகள் எங்கே என்றும் அவளை காண விரும்புவதாகவும் கூறினர்.அவர்கள் அதை அனுமதிக்காமல் அவர்களை ஏதேதோ காரணத்தை சொல்லி தடுத்தனர், அவர்களுக்கு சந்தேகம் எழுந்தது,அவர்களது கண்கள் அவளை தேடின ஆனால் அவளை காணமுடியவில்லை.அவர்கள் வீட்டைவிட்டு வெளியேறினர். இருப்பினும் தன் மகளுக்கு ஏதோ ஆபத்து என்று அறிந்த அவளது அம்மா அவளது வீட்டைவிட்டு வெளியேற தயாராகவில்லை.
தன் மகளை வீடெங்கும் தேடினாள் கிடைக்கவில்லை! அவரதுவீட்டு பின்புறம் ஒருசின்ன பூட்டுபோட்ட ஒரு அறை. தெரிந்துகொண்டால் தன் கணவரை அழைத்தாள், பூட்டு உடைக்கப்பட்டது அதில் அவர்களது ஒரே மகளான அவள் இருப்பதை கண்டனர். உருத்தெரியாமல் போன அவளை கண்டு அதிர்ச்சியுற்றனர்.நிலைமையை அறிந்த அவர்கள் தனது மகளை தன்னோடு அனுப்பும்படி கெஞ்சினர்.
இரக்கமில்லா அவன் அவர்களையும் தாக்கினான்.தனக்கு சொத்தை எழுதிகொடு என்று மிரட்டினான். அவளது பெற்றோர் அதை ஒப்புக்கொள்ளவில்லை. அவள் பெயரில் இருக்கும்போதே நீ அவளை இவ்வளவு துன்புறுத்துகிறாய். உன் கையில் சொத்து இருந்தால் நீ அவளைகொன்றுவிடுவாய். எனவே அவளை எங்களிடமனுப்பிவிடு என்று அவனிடம் மன்றாடினர். அவனோ அவர்களைகட்டிவைத்து துன்புறுத்தினான்.
அவர்களின் அழுகுரல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் உதவியால் அங்கிருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று வெளியேறினர்.
தன் மகளின் வாழ்க்கையை நினைத்து வருந்திய அவளது அப்பாவிற்கு பக்கவாதம் வந்துவிட்டது. ஒருபுறம் தன் மகள் வாழ்க்கை கேள்விக்குறியாக இருக்க,ஒருபுறம் தன் கணவன் பக்கவாதத்தில் அவதியுற தன் கணவனையும் மகளையும் காப்பாற்றும் பொறுப்பு அவளது அம்மாவிடம் வந்தது.கஷ்டத்தை கேட்க வந்த உறவினர்கள் கஷ்டத்தில் பங்குகொள்ள தயங்கினர். உறவினர்களின் தயவில்லாத அந்த தாய் தன் சொத்திலிருந்து தாலிவரை எல்லாவற்றையும் வித்து தன் குடும்பத்தை காப்பாற்றினாள்.அதன் விளைவாக தன் மகளை பி.எட் வரை படிக்க வைத்தால், தன் கணவணின் உடல் நலத்தை காப்பாற்றி நல்ல வேலைக்கு செல்லவைத்தால். சரிந்த தன் குடும்பத்தை மீண்டும் தலைதூக்கி நிறுத்தினாள். அந்த குடும்பம் அமைதிநிலையை அடைய சுமார் ஆறு ஆண்டுகள் ஆகின.
அதன்பிறகு தனது மகளுக்கு மற்றோரு துணையைத்தேட ஆரம்பித்தனர்.இருந்தாலும் அவளுடைய வாழ்வில் நடந்த சில கசப்பான சம்பவத்தினால் யாரும் முன்வந்து மணக்க தயாராயில்லை. அவளது வாழ்க்கை அவ்வளவுதான் என்று இருந்த சமயத்தில் ஒரு நல்லஉள்ளம் படைத்த ஒரு மனிதன் தான் மணந்து கொள்வதாக முன்வந்தார். அவரிடம் அவளது பெற்றோர்கள் எல்லா விசயத்தையும் கூறினர்.அவர் எல்லாவற்றையும் கேட்டு சம்மதம் என்றுசொன்னார்.இருப்பினும் அவர்களுக்கு அவர்மேல் நம்பிக்கை வரவில்லை. அவரது வீட்டிற்கு சென்று அவர்களைபற்றி விசாரித்தனர்,மற்றும் அக்கம் பக்கத்திலும் சென்று விசாரித்தனர்.விசாரித்ததில் அவர்களுக்கு தெரிந்தது அவரது வீட்டிலும் அவரது தங்கை இதுபோன்ற கொடுமைகளை அனுபவித்தாலும் அவளை ஒரு நல்ல உள்ளம் கொண்ட ஒருமனிதன் மணந்தார் எனவே தானும் அவரை போல இப்படிப்பட்ட கொடுமைகளால் வாழ்வை தொலைத்த பெண்ணை மணந்து அவளுடன் தனது வாழ்க்கையை தொடங்குவதை இலச்சியமாக கொண்டுள்ளதாகவும் அவரது வீட்டை சேர்ந்தவர்களும் அக்கம் பக்கத்தினரும் கூறினர். இதைவிட வேறென்ன தகுதிவேண்டும் என்றுநினைத்த அவளது பெற்றோர் அவளது வாழ்வை ஒரு நல்லவர் கையில் கொடுத்தனர். திருமணம் நன்றாக நடக்க மீண்டும் தன் வாழ்வை தொடங்கினாள் அந்த பெண்.
இப்பொழுது அந்த தம்பதியினர் சந்தோஷமாக வாழ்ந்தாலும் காலம் கடந்து திருமணம் நடந்ததால் ஒரு வாரிசு இல்லாமல் அவதியுறுகின்றனர்.
அவர்களுக்காக நாம் ஆண்டவனை வேண்டுவோமாக!
இப்பொழுது அந்த பெண் அரசாங்க பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகின்றார். அவளது கணவன் தனியார் போக்குவரத்து துறையில் உயர்ந்த பணியில் உள்ளார். மன்னிக்கவும் பெயரிட விரும்பவில்லை.
நன்றி.

9 comments:

 1. பெண் கொடுக்கும் பொது மிக கவனமாக இருக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துகிறது உங்கள் பதிவு.
  பொண்ண பெத்தவங்க கேடிகளை தேடி போய் பொண்ணு தராங்க... நல்லவர்கள் நாடி போனாலும் நம்பவே மாட்டேன்கிறாங்க.
  என்ன உலகமோ போங்க... ??

  ReplyDelete
 2. நாலு வார்த்தை சொன்னாலும் நச்சுனு சொன்னிங்க. எப்பிடி !!
  கருத்துக்கு நன்றி.

  ReplyDelete
 3. எலலோரும் நல்லவர்களும் ்இல்லை - எல்லோரும் கெட்டவர்களும் இல்லை்.நல்ல உள்ளம் உள்ளவர்கள அருகிலேயும் இருக்கலாம்.வெகு தொலைவிலும் இருக்கலாம்.அவ்வாறு நல்லவர்கள் நாலுபேர் இருப்பதால்தான் நல்ல மழை பொழிகின்றது:.வாழ்க வளமுடன்.வேலன்.

  ReplyDelete
 4. கருத்துக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 5. அருமையா சொன்னீங்க... புடிங்க ஒரு பூங்கொத்து

  ReplyDelete
 6. புடிங்க ஒரு பூங்கொத்து

  பூங்கொத்துக்கு ரொம்ப நன்றி பாஸ்!

  ReplyDelete
 7. அருமை பேரா ....

  உங்கழுக்கு என் வணக்கங்கள்

  செதில்குமார்.....

  ReplyDelete
 8. //எலலோரும் நல்லவர்களும் ்இல்லை - எல்லோரும் கெட்டவர்களும் இல்லை்.நல்ல உள்ளம் உள்ளவர்கள அருகிலேயும் இருக்கலாம்.வெகு தொலைவிலும் இருக்கலாம்.அவ்வாறு நல்லவர்கள் நாலுபேர் இருப்பதால்தான் நல்ல மழை பொழிகின்றது:.வாழ்க வளமுடன்.வேலன்.//

  நல்லவர்களை தான் சீக்கரம் அடையாளம் காண முடிவதில்லையே ...
  அதனால் தான் இவ்வளவு பிரச்சனைகள்.......

  ReplyDelete
 9. அருமயாக சொன்னீர்கள் மிக்க நன்றி!

  ReplyDelete