Thursday, March 18, 2010

இவங்களெல்லாம் என்ன பண்ணலாம்?




நாங்கள் போனவாரம் ஒரு குளிர்சாதனப்பெட்டி (ப்ரிடிஜ்) வாங்கினோம். வாங்கும்போது கடை உரிமையாளர் குளிர்சாதனப்பெட்டிக்குள் ஸ்டெபிலைசர் இருப்பதாகவும் நீங்கள் நம்பவில்லை என்றால் இதில் உள்ள லேபிளை பாருங்கள் என்றும் கூறினார்.அவர் சொன்னபடி லேபிளும் இருந்தது. நம்பிக்கையாக நாங்களும் வாங்கினோம். குளிர்சாதனப்பெட்டி வாங்கிய மூன்று நாட்களுக்கு பிறகு,


ஒரு நபர் தொலைபேசியின் மூலமாக நாங்கள் குளிர்சாதனப்பெட்டி பழுதுபார்க்கும் அலுவலகத்திலிருந்து பேசுகிறோம். உங்களுக்கு குளிர்சாதனப்பெட்டி உபயோகிக்கும் முறையைப்பற்றி கூறவேண்டும் என்று கூறினர். நாங்களும் சரி வாருங்கள் என்று அழைத்தோம். சொன்ன நாளில் ஒரு இளைஞன் எங்கள் வீட்டுக்கு வந்தான். வந்தவன் குளிர்சாதனப்பெட்டி உபயோகிக்கும் முறையைப்பற்றி கூறியதோடு அல்லாமல் உங்கள் குளிர்சாதனப்பெட்டிக்கு ஸ்டெபிலைசர் கட்டாயமாக வைக்கவேண்டும் இல்லையென்றால் குறுகிய காலத்திற்குள்ளேயே பழுதாகிவிடும் என்றும் ஸ்டெபிலைசர் எங்களுடையதுமட்டும்தான் வைக்கவேண்டும் என்றும், எங்களிடம் மட்டும்தான் தரமாக கிடைக்கும் அதுவுமல்லாமல் என்னிடம் ஒன்றுமட்டும் தான் உள்ளது நீங்கள் தாமதித்தால் திரும்ப பெறுவதற்க்கு ரொம்ப நாட்களாகும் எனவே உடனடியாக வாங்குங்கள் என்றும் கூறினான்.நாங்கள் அவனிடம் கடைக்காரன் ஸ்டெபிலைசர் தேவையில்லை என்று கூறினான் மற்றும் குளிர்சாதனப்பெட்டியில் உள்ள லேபிளிலும் தேவையில்லை என்று எழுதப்பட்டுள்ளது இப்போது நீங்கள் கட்டாயமாக வாங்கவேண்டும் என்று கூறுகிறீர்கள் இதை நீங்கள் நாங்கள் வாங்கும்போதே ஏன் சொல்லவில்லை என்று கேட்டோம்.


அதற்க்கு அவன் அந்த லேபிளின் கீழ் உள்ள வாசகத்தை பாருங்கள் அதில் 160º-லிருந்து 230º- வரை மட்டும் தான் மின்சாரதைத்தாங்கும் வசதி உள்ளது. வெயில் காலத்தில் மின்னிணைப்பு அடக்கடி துண்டிக்கபடும் நேரத்தில் மின்சாரம் சரிவர இல்லாமல் குறைந்தும் அதிகமாகவும் வரும் இதனால் உங்களது குளிர்சாதனப்பெட்டி விரைவில் பழுதாகிவிடும் என்றும் விற்பனையாளர்கள் வியாபாரத்திற்காக இதை யாரிடமும் கூறுவதில்லை என்றும் கூறினான்.


அவனுடைய வார்த்தைகளை நம்பிய நாங்கள் ஸ்டெபிலைசர் விலை என்ன என்று கேட்டோம். அதற்க்கு அவன் 1550 ருபாய் மட்டுமே என்று கூறினான். நாங்கள் உடனே நீங்கள் கூறிய விவரத்திற்கு ரொம்ப நன்றி எங்களுக்கு தேவைப்பட்டால் நாங்கள் உங்களை அழைக்கிறோம் என்று கூறி அனுப்பினோம்.அதன் பிறகு நாங்கள் கடைக்காரனிடம் சென்று ஏன் எங்களிடம் முழு விவரத்தை சொல்லவில்லை என்று கேட்டோம். அதற்கு அவர்கள் எங்களின் சிபாரிசுப்படி ஸ்டெபிலைசர் தேவையில்லை உங்களுக்கு வேண்டுமானால் எங்களிடம் உள்ளது என்று கூறினர்.


சரி எப்படியாவது வாங்க வேண்டும் என்று முடிவுசெய்து அவனிடம் விலைக்கேட்டால் அவன் 1100 ரூபாய் என்று கூறினான் கடைசியாக வேறுவழியில்லாமல் இவ்வளவு காசுப்போட்டு வாங்கிய குளிர்சாதனப்பெட்டியை காப்பாற்றுவதற்காக ஸ்டெபிலைசர்
வாங்கினோம்.


இதில் என்னவென்றால் இவர்களிடமே இவ்வளவு வித்தியாசத்தில் விலையிருக்கிறது என்றால் உண்மையானவிலை என்னவாக இருக்கும்? மற்றும் டெமோ என்று சொல்லிக்கொண்டு எப்படி மக்களை ஏமாற்றுகின்றனர் பாருங்கள்?
எனவே குளிர்சாதனப்பெட்டி வாங்கும் எல்லோரும் தீர விசாரிச்சு அப்புறமா வாங்குங்க தேவையில்லாம காச விட்டுடாதீங்க
.

5 comments:

  1. //வாங்கும்போது கடை உரிமையாளர் குளிர்சாதனப்பெட்டிக்குள் ஸ்டெபிலைசர் இருப்பதாகவும் நீங்கள் நம்பவில்லை என்றால் இதில் உள்ள லேபிளை பாருங்கள் என்றும் கூறினார்//

    சொன்னா உடனே நம்பிடறதா,,, மின்னணுவியல் துறையில் இருந்து கொண்டே ஏமாந்துட்டீங்களே ...
    என்னமோ போங்கோ ??

    ReplyDelete
  2. //இவங்களெல்லாம் என்ன பண்ணலாம்? //

    இவங்களை எல்லாம் ஒண்ணுமே பண்ண முடியாது .
    நாமளா திருந்தினாதான் உண்டு. :)

    ReplyDelete
  3. ஒன்னும் சொல்றதுக்கில்ல.

    ReplyDelete
  4. //சொன்னா உடனே நம்பிடறதா,,, மின்னணுவியல் துறையில் இருந்து கொண்டே ஏமாந்துட்டீங்களே ...
    என்னமோ போங்கோ ??//

    Well, it is electrical, not electonics... :)

    ReplyDelete
  5. //வாங்கும்போது கடை உரிமையாளர் குளிர்சாதனப்பெட்டிக்குள் ஸ்டெபிலைசர் இருப்பதாகவும் நீங்கள் நம்பவில்லை என்றால் இதில் உள்ள லேபிளை பாருங்கள் என்றும் கூறினார்.//

    இதெல்லாம் அவுங்க வியாபார technic .......
    நாம தான் உஷாரா இருக்கனும்.........

    ReplyDelete