Thursday, March 25, 2010

நான் கண்டு வியந்த மனிதன்

தன்னலம் கருதாது தன் குடும்பத்தார் நலம் மட்டும் கருதும் ஒரு உண்மை நண்பனின் கதை.
அதிகவசதில்லாத நடுத்தரமான கூட்டுக்குடும்பம், கிட்டத்தட்ட நான்கு சகோதரர்களின் குடும்பங்கள் ஒரே வீட்டில் ஒற்றுமையாக வசிக்கின்றனர். இந்தகாலத்தில் இது ஒரு நல்ல விஷயமாக இருந்தாலும் அதிலும் ஒரு சில (பல) கஷ்டங்கள் இருக்கத்தான் செய்கின்றன.
என் நண்பனோ குடும்பத்தின் முதல் ஆண் வாரிசு. முதல் வாரிசு என்பதால் மட்டுமல்ல பொறுப்பு மிகுந்த பல கடமைகள் தானே சுமக்க வேண்டும் யாருக்கும் கஷ்டம் கொடுக்ககூடாது என்று நினைக்ககூடிய அன்புள்ளம்கொண்ட இளைஞன்.அவன் தன் கஷ்டத்தை பாராது அல்லும் பகலும் உழைப்பவன் காரணம் அவன் வீட்டில் யாரும் சரியாக வேலைக்கு செல்வதில்லை அப்படியே சென்றாலும் ஓரிரு நாட்கள் வேலை செய்துவிட்டு அதில் வரும் காசை ஊதாரித்தனமாக செலவிட்டுவிட்டு வேலையையும் தொலைத்துவிட்டு வரும் சோம்பேறிகள்.ஏதோ தனக்கும் இந்த குடும்பத்திற்கும் சம்பந்தம் இல்லாதது போல் நடந்துக்கொள்ளும் அவர்களின் மேல்
கோபப்படுவதில் அர்த்தமில்லை என்று புரிந்துக்கொண்டு அவர்கள் பெற்ற குழந்தைகளை நன்றாக வாழவைக்க வேண்டுமென்ற பொறுப்பும் கடமையும் தனது திருமணத்தை பற்றி யோசிக்காது அவர்களுக்காகவே தன் காலத்தை அவர்களுடன் மிகவும் சந்தோசமாக செலவிடும் அவன் படும் கஷ்டங்கள் கொஞ்சமல்ல.சொந்தமாக வீடு இருந்தும் மழை காலங்களில் ஒதுங்ககூட வழியில்லாததுபோல் வீட்டிற்குள் நுழையும் மழை துளிகள், படிக்கும் வயதில் வறுமையை காரணம் காட்டி வீட்டில் முடங்கி கிடக்கும் தம்பி தங்கைகள் இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் தன்னைபற்றி யோசிக்காது தன் குடும்பத்தைப்பற்றி யோசிக்கும் அவனிடம் ஒருநாள், ஏன் திருமணம் வேண்டாம் என்கிறாய் என்று காரணம் கேட்டோம் அதற்கு அவன் கூறிய காரணம், என்னுடைய கஷ்டத்தை என்னை நம்பி வரும் அந்த பெண் சுமப்பதை என்னால் அனுமதிக்க முடியாது.மேலும் என்னால் அவளுடைய தேவைகளை சரிவர நிறைவு செய்ய முடியும் என்ற நம்பிக்கை என்னிடம் இல்லை என்று பலவகையான காரணம் காட்டி திருமணத்தை தள்ளிபோடுகிறான். இத்தனைக்கும் காரணம் அவன் மனதிலும் எண்ணத்திலும் நிறைந்திருக்கும் அவன் குடும்பமும் அவன் நிறைவேற்றவேண்டிய கடமைகளும் . இதையெல்லாம் அருகிலிருந்து பார்க்கும் சிலருக்கு அவன்மேல் பரிதாபமும் பலருக்கு வியப்பு ஏற்படுவதும் இயல்புதான். இருந்தாலும் என்னை பொறுத்தவரை இவனை போல நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பலர் இன்னும் சிலுவைசுமக்காத ஏசுவாகதான் வாழ்கின்றனர்!

3 comments:

  1. பாவம்தான்... சீக்கிரம் கல்யாணம் ஆகட்டும் !!

    ReplyDelete
  2. நல்லது நடக்கட்டும்

    ReplyDelete
  3. பாவம் பாவம் என்று பார்பதனால் தான் மற்ற சகோதரர்கள் திருந்தாமல் அவர்கள் வாழ்கையும் கூட இருக்கவங்க வாழ்கையும் தொலைகிறார்கள் .....

    சகோதரராக இருந்தாலும் பாவம் ஓர் அளவுக்கு தான் பார்க்கணும்....

    தனக்கு என்று ஒரு வழி அமைத்து கொண்டு போய்டே இருக்க வேண்டியதுதான் ......
    அப்பா , அம்மாவ கூட வச்சு பார்த்துகிட்டா போதும்............

    ReplyDelete